சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவு வழங்கும்போது கூட்டம் குவிவதால் கரோனா பரவும் அபா யம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் நுரை யீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் உணவு வழங்குகிறது. காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்குவதில்லை. இந்நிலையில் அறநிலையத் துறையினர், முஸ்லிம் அமைப்பினர், தன் னார்வலர்கள் பலர் தினமும் இலவசமாக உணவு வழங்குகின்றனர். அவர்கள் வாகனத்தில் இருந்தபடியே வழங்குகின்றனர். இதை வாங்குவதற்காக காய் ச்சல், நுரையீரல் தொற்றால் பாதிக் கப்பட்டோர், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை பல்நோக்குப் பணியாளர்கள் என பலரும் ஒரே இடத்தில் கூட்டமாக குவிகின்றனர். மேலும் அவர்கள் சமூக இடை வெளியின்றி திரண்டு உணவு வாங்கிச் செல்வதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நோயாளிகள், பார்வையாளர்கள், ஊழியர்களுக்கு தனித்தனியாக உணவு வழங்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago