கருணாநிதி பிறந்த நாளையொட்டி - பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பிறந்தநாளான இன்று ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை கட்சியினர் வழங்க வேண்டும் என்று அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநி தியின் பிறந்தநாள் இன்று கட்சி சார்பில் கொண்டாடப்பட உள்ளது. தற்போது கரோனா தொற்று பரவும் சூழலில் பொது முடக்கம் காரணமாக கட்சியினர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்க ளை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத் தியுள்ளார்.

அதன்படி, விருதுநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வா கிகள் கரோனா விதிமுறை களுக்கு உட்பட்டு ஏழை எளி யோருக்கு நலத்திட்ட உதவி களை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்