திருப்பத்தூர் அருகே மயான பாதை பிரச்சினை ஆர்டிஓ யோசனையை ஏற்க மக்கள் மறுப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே பிராமணம்பட்டியில் பொது மயானத்துக்கு செல்வதற்கான பாதை, தனியார் பெயரில் பட்டா உள்ளது. இதையடுத்து அவர், அப்பாதையை வேலியால் மறித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு இறந்தவர் உடல் வேறு பாதையில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மயானத்துக்குச் செல்ல நிரந்தரமாக பாதை ஏற்படுத்தி தர வேண்டுமென கிராம மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் தலைமையில் வட்டாட்சியர் ஜெயந்தி உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரண்டு மாற்றுவழிகளை கோட்டாட்சியர் முன்வைத்தார். அவை நீர்வழித்தடமாகவும், கோயில் இடமாகவும் இருந்ததால், கிராம மக்கள் ஏற்க மறுத்தனர். மேலும் பழைய பாதையிலேயே பிரேதத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் முடிவு எட்டாமல் பேச்சுவார்த்தை பாதியில் முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்