ராமநாதபுரம் மாவட்டத்தில் - மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

கரோனா பாதித்த நோயாளிகளுக்கு கருப்புப் பூஞ்சை எனும் கண்களை பாதிக்கும் நோய் பரவி வருகிறது. இந்நோய் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதில் கீழக்க ரையைச் சேர்ந்த 70 வயது முதியவர் மட்டும் உயிரிழந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே வித்தானூரைச் சேர்ந்த விவசாயிக்கு (56) கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டது. அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனாவில் குணமடைந்து கடந்த 7 நாள்களுக்கு முன்புதான் வீட்டுக்கு திரும்பினார்.

அதனையடுத்து அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண் வீங்கிய நிலையில் அவரை நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந் தனர். அப்போது பரிசோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டு நுண்ணுயிரியல் துறை சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்