கரோனா வைரஸ் தொற்றிலிருந்து - குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார்.குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,சுகாதாரத் துறை, காவல் துறை, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பராமரிப்பு இல்ல நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்றி உள்ள குழந்தைகளை கண்டறிய வேண்டும். அக்குழந்தைகளை குழந்தைகள் நலக்குழு முன் முன்னிலைப்படுத்தி, மறுவாழ்வு நடவடிக்கைகளான தத்து வழங்குதல், பிற்காப்பு திட்டம், நிதி ஆதரவு மற்றும் இளைஞர் நீதி (குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015-ன்படி நிறுவனத்தில் சேர்த்தல் வேண்டும்.

பெற்றோர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உறவினர்கள் மற்றும் பாதுகாவலர் இல்லாமல் ஆதரவின்றியுள்ள குழந்தைகளுக்கு தற்காலிகமாக தங்கும் வசதிகள் செய்துதர வேண்டும்.

நோய் தொற்று பாதிப்புக்குள்ளான குழந்தைகள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை மையத்துக்கு பரிந்துரை செய்தல் மற்றும் சிகிச்சைக்கு பிந்தைய காலத்தில் ஊட்டச்சத்து ஆதரவை உறுதி செய்தல் வேண்டும். மாவட்டத்தில் பதிவு பெற்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தை தேர்வு செய்து,அந்நிறுவனத்தை குழந்தைகளுக்கான கரோனா பராமரிப்பு நிலையமாக அமைத்து செயல்படுத்த வேண்டு மென முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்