மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் - கரோனா சிகிச்சை தொடர்பாக குறுகிய கால தொழில் பயிற்சி : 10-ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் துறையின் மூலம் கரோனா தொடர்பான பணி பெற குறுகிய கால பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மூலம் பிரதமரின் கவுசல் விகாஸ் யோஜனா 3.0 என்ற பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சுகாதாரத்துறையில் கரோனா தொடர்பாக இலவசமாக குறுகிய கால பயிற்சி ஒரு மாதம் அளிக்கப்பட உள்ளது.

இதில் 6 வகை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவசர மருத்துவ தொழில்நுட்ப வியலாளர், பொது வேலை உதவியாளர், தீவிர சிகிச்சைப் பிரிவு, வீட்டு சுகாதார உதவியாளர், மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பிளேபோடோமிஸ்ட் ஆகிய பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். கருத்தியல் பாடத்திட்டம் உரிய பயிற்சி மையத்திலும், செய்முறை பயிற்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, சுகாதார மையங்களில் வழங்கப்படும்.

இப்பயிற்சிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு, தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை http://bit.ly/3i3FQ7Z என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 98430 22463, 73970 32681 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர பெயர், கல்வி தகுதி, தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றை ricsalem7@gmail.com என்ற மின் அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94422 08464, 98659 13900, 94990 55827, 94427 94071, 94430 15671 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சிக்கு விண்ணப்பிப்ப வர்கள் தங்களது தகவல் களை https://forms.gle/r2a4ib1vxHX TWacS6 என்ற இணைப்பினைப் பயன்படுத்தியும் பதிவேற்றம் செய்யலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநரை அணுகியும் அல்லது 63836 43562, 70220 45795, 86101 50766, 81100 51765 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் https://forms.gle/JRNro3cep5WJ2Amc7 என்கிற இணையதளம் மூலமாக படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

பயிற்சிக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பித்து பயன்பெறலாம், என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்