அரகண்டநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் தில் விவசாயிகள் விற்பனை செய்த விளை பொருட்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்யாமல் நீண்ட நாட்களாக நிலுவை வைத்துள்ளதை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
விழுப்புரம் விற்பனைக்குழுவின் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் ஜெயக்குமார், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடந்த 27.12.2019 முதல் 21.10.2020 வரை உரிமம் பெற்று நடத்தி வரும் அரகண்டநல்லூர் பஜனை மட கோயில் தெருவைச் சேர்ந்த வியாபாரியான ராஜ் (37) என்பவர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த விளை பொருட்களுக்குரிய பணமான ரூ.27 லட்சத்து 45 ஆயிரத்து 803-ஐ சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய விற்பனைக் கூடத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் அந்த பணத்தை ஏமாற்றிமோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து விற்பனைக்குழுவின் செயலாளர் ஜெயக்குமார், எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் புகார்கொடுத்தார். அதன்பேரில் ராஜ் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago