சோழத்தரம் அருகே குறிஞ்சிக்குடி பெலாந்துறை வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு 2 கோபுர கலசங்கள் கிடந்தன. இதைப் பார்த்த விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷூக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் சோழத்தரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முஷ்ணம் காவல் ஆய்வாளர் வினதா, சோழத்தரம் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் போலீஸார் பெலாந்துறை வாய்க்காலில் கிடந்த 1 அடி மற்றும் முக்கால் அடி உயரமுள்ள இரண்டு கோயில் கலசங்களை மீட்டு காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து நேற்று முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் சசிகுமாரிடம் காவல் ஆய்வாளர் வினதா மற்றும் போலீஸார் 2 கலசங்களையும் ஒப்படைத்தனர்.
கலசங்களை மர்ம நபர்கள் யாரேனும் கோயிலில் திருடி எடுத்து வந்து வயலில் வீசியுள்ளனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago