கருப்பு பூஞ்சை நோய்க்கு விரைவில் மாவட்டத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்தார்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் தூய்மைக் காவலர்களுக்கு கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்களுக்குத் தொகுப்புகளை வழங்கிய ஆட்சியர் கண்ணன் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி ஊக்கப்படுத்தினார். அதன்பின்னர் ஆட்சியர் அளித்த பேட்டியில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 19,342 பேர் பாதிக்கப்பட்டு 12 ஆயிரம் பேர் குணமடைந் துள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியே சுற்றுவதாக வந்த புகாரை அடுத்து அவர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
18 கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே நாளை (ஜூன் 3) ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட தற்காலிக மையம் திறக்கப்பட உள்ளது.
இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 3 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்நோயால் பாதிக்கப் பட்டோருக்குத் தேவையான மருந்துகளை அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் மருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. கருப்புபூஞ்சை தொற்றுக்கு மாவட்டத்திலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago