திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தீர்ந்தது : காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முற்றிலும் தீர்ந்ததால் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சில தினங்களாக கரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவ மனை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிக்குச் சொந்தமான கமலா நேரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திண்டுக் கல் பேருந்து நிலையத்தில் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்தனர். ஆனால் மாலையில் தடுப்பூசி தீர்ந்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மத்திய அரசிடமிருந்து கரோனா தடுப்பூசி பெறப்பட்டு, அதை மாநில அரசு மாவட்ட வாரியாக பிரித்தளித்த பின்னரே, திண்டுக்கல் மாவட்டத்துக்கு தடுப்பூசி கிடைக்கும் என சுகாதாரத்துறையினர் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்