சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்து வராததால், பாதிக்கப்பட் டோருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 4 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆம்போடெரி சின்-பி மருந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு இதுவரை வரவில்லை. இதனால் நோயாளிகளுக்கு இதர ஆன்டிபயாட்டிக் மருந்துகளே அளிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகமாக இருந்தால் கட்டாயம் ஆம்போடெரிசின்-பி மருந்து செலுத்த வேண்டும்.
இதனால் தமிழக சுகாதாரத் துறை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்போடெரிசின்-பி மருந்தை அனுப்பி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப் பட்டோருக்கு லேசான அறி குறியே உள்ளன. இதில் 2 பேர் குணமாகினர். ஒருவர் மதுரையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். மற்றொருவருக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறோம். ஆம்போடெரிசின்-பி இல்லாவிட்டாலும் மற்ற மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago