காவேரிப்பட்டணத்தில் மா மண்டிகளில் ஏலம் மூலம் மாங்காய்கள் விற்பனை நடைபெறும் நிலையில்,வெளி மாநில வியாபாரிகள் வராத தால், விலை வீழ்ச்சியடைந்து இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இயற்கை இடர்பாடுகள், விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் விவசாயிகள் தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருகின்றனர். நடப்பு ஆண்டில் பனி, வெயில், பூச்சி தாக்குதல், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவையால் மா விளைச்சல் 70 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளது. டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மா மரங்களில் 30 சதவீதம் காய்கள் காய்த்துள்ளன.
தற்போது பல்வேறு ரக மாங்காய்களை அறுவடை செய்து விவசாயிகள் மா மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு ஏல முறையில் மாங்காய்கள் விற்பனைசெய்யப்படுவது வழக்கம். இதில், கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் நேரடியாக கலந்து கொண்டு மாங்காய்கள் வாங்கி செல்வார்கள்.
தற்போது கரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வியாபாரி கள் மண்டிகளுக்கு வருவதில்லை. இதனால் மாங்காய்கள் விலை வீழ்ச்சி ஏற்பட்டு இழப்பினை சந்தித்து வருவதாக மாவிவசாயி கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவேரிப் பட்டணம் பகுதியைச் சேர்ந்த மா விவசாயிகள் கூறும்போது, காவேரிப்பட்டணம் மா மண்டியில் நேற்று வியாபாரிகள் வராததால், 25 கிலோ மாங்காய்கள் தரத்தைப் பொறுத்து செந்தூரா ரகம் ரூ.450, பையனபள்ளி ரூ.550, மல்கோவா ரூ.1500, பெங்களூரு கிலோ ரூ.15, நீலம் கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. வழக்கமாக மாவிளைச்சல் பாதிக்கப்படும் காலங்களில் கூடுதல் விலைக்கு மாங்காய்கள் விற்பனை செய்தால் மட்டுமே இழப்பு ஏற்படாது. ஆனால் ஊரடங்கால் மாவிற்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago