இ-பதிவு இல்லாமல் இயக்கப்பட்ட 315 வாகனங்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் நேற்றுஇ-பதிவு இல்லாமல் இயக்கப் பட்ட 213 வாகனங்கள், குமாரபாளையத்தில் 102 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழகத்தில் அமல்படுத்தி உள்ளது. மிக அவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல விரும்புவோர் இ-பதிவு முறை மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்று வெளியில் செல்லலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், சிலர் இ-பதிவு மேற்கொள்ளாமலும், அவசியமற்ற தேவைகளுக் காகவும் வெளியில் நடமாடு கின்றனர்.

இதுபோன்றவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நேற்று தருமபுரி மாவட்டத்தில் இ-பதிவு இல்லாமல் இயக்கப்பட்ட 213 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

குமாரபாளையம் தாலுகா விற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மே 28, 29, 30 மற்றும் 31 ஆகிய 4 நாட்களில் விதிமுறை வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்படி 102 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என குமாரபாளையம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்