தி.மலை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் கரோனா தொற்றுக்கு 113 பேர் உயிரிழந் துள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுக்கு கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 17,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 24,024-ஆக இருந்த பாதிப்பு, கடந்த மே 31-ம் தேதி 41,330-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. தற்போது 7,596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று பரவல் அதிகரித்ததுபோல், உயிரிழப் பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 ஏப்ரல் வரை (13 மாதங்கள்), கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 302 பேர் உயிரிழந்தனர்.
ஆனால், கடந்த மே மாதத்தில் (ஒரு மாதம்) மட்டும் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர், மூச்சுத் திணறல் ்காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “கரோனா தொற்றின் தாக்கம் ஜுன் மாதத்திலும் இருக்கும். முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கலாம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago