நீலகிரியில் திக்காஷ் அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் கரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கணேஷ் ஆகியோரிடம் அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில்ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் தன்னிறைவு அடைந்துள்ளோம். படுக்கைகளும் காலியாக உள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறியதாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றுக்கான 13 அறிகுறிகளில், ஏதாவது ஒன்று இருந்தால்கூட, அந்த நபருக்கு உடனே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
முதல்வரின் ஆய்வுக் கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்துக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மேலும், நீலகிரி மாவட்டத்துக்குள் வர இ-பாஸ் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தக் கோரியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago