சிங்களாந்தபுரம் ஊராட்சியில் - வார்டு மக்களுக்கு காய்கறிகளை வழங்கிய கவுன்சிலர் :

By செய்திப்பிரிவு

ராசிபுரம் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் தங்களது அன்றாட பணிக்கு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளர்கள் அன்றாட உணவுத் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் மக்களின் நலன் கருதி சிங்களாந்தபுரம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் சாந்தி கணக்கன் தனது வார்டில் உள்ள 150-க்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கும், கிராமத்தில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கும் தனது சொந்த செலவில் ஒரு வாரத்திற்கு தேவையான காய் கறிகளை கொள்முதல் செய்து வீடுவீடாகச் சென்று வழங்கினார்.

இதுபோல் மற்ற மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களுக்கு உதவி செய்தால் பயனாக இருக்கும் என வார்டு உறுப்பினர் தெரிவித்தார். இவரது செயல் கிராம மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்