சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு வருபவர் களின் பெயர்களை பதிவு செய்யும் பணி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கணினி மையத்தில் நடைபெறுகிறது.
இந்நோயாளிகள் வரிசையில் நின்று பதிவு அட்டை பெறுகின் றனர். அதே வரிசையில் கர்ப்பிணி கள், விபத்து சிகிச்சைக்கு வருவோரின் உறவினர்கள், பிற நோயாளிகளும் நின்று முன்பதிவு செய்கின்றனர். இத னால் கரோனா அறிகுறியுடன் வருவோர் வரிசையில் நிற்பதற்கு சிரமப்படுவதோடு, கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கும் கரோனா பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கரோனா தொற்று மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும், பிற நோயாளிகளுக்கும் தனித்தனியாக முன்பதிவு மையத்தை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago