வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1,144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளில் நோயாளி களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. வேலூர் மாவட்டத்தில் புதிதாக 265 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த தொற்று பாதிப்பு சுமார் 42 ஆயிரம் என உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்குகரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,800-ஆக உயர்ந் துள்ளது. கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை தவிர 3,982 பேர் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின் றனர். கடந்த வாரத்தை காட்டிலும் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளது. முழு ஊரடங்கு நல்ல பலன் அளித்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.
அதேபோல, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசி 5,474 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 109 பேருக்கும் போடப்பட்டுள்ளது. நகர் புறத்தைக் காட்டிலும் கிராமப் பகுதிகளிலேயே அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவ தாக சுகாதாரத்துறையினர் தெரி வித்துள்ளனர்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 488 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 41,330-ஆக உயர்ந்துள் ளது. 33,319 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7,596 பேர்சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago