நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கரோனா பரவல் காலத்தில் உதகை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், கரோனா மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் மூன்று மாத காலத்துக்கு 2021, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பணிபுரிய சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநர் மூலம் பொது மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிப்பு செய்யப் படும்.
அதன்படி, பொது மருத்துவர் எம்.பி.பி.எஸ். என்ற கல்வித் தகுதியில் ரூ. 60,000 மாதாந்திர தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விருப்பமுள்ள நபர்கள், தங்களது கல்வித்தகுதி சான்றிதழ்,அடையாள அட்டை, மருத்துவா்களுக்கான மருத்துவக்கவுன்சில்பதிவு,பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன் ‘துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், சிடி ஸ்கேன் மையம் அருகில், உதகை - 643001’ என்ற முகவரியில் உடனடியாக அணுகலாம்.
கூடுதல் விவரங்களுக்கு89032-16454 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago