கரோனா தொற்றாளர்களின் விவரங்களை - தனியார் ஸ்கேன் மையங்கள் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் தொற்றின் தாக்கம் அதிகளவில் உள்ள நிலையில், தனியார் ஸ்கேன் மையங்கள் நாள்தோறும் எடுக்கும்பரிசோதனை மூலமாக கண்டறியப்படும் நபர்களின் விவரங்களை, திருப்பூர் ஆட்சியர் அலுவலக pagen.tntpr@gmail.com, collrtupddm@gmail.com ஆகியஇ-மெயில் முகவரிக்கு கட்டாயம்தெரிவிக்க வேண்டும். இதன்மூலமாக பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி, தொற்று பரவலைகட்டுப்படுத்த முடியும். பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க தவறும்மையங்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்