விழுப்புரம் நகராட்சி அலுவலகத் தில் நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் உள்ளிட்டவற்றை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியிடம் சங்கத்தினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியது: தமிழக முதல்வர் வேண்டுகோளுக்கிணங்க விழப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கரோனா தடுப்பு பணிகளுக்கும் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் தேவையான நிதியுதவி மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறார்கள். அதன்படி நகை வியாபாரிகள் சங்கத்தினர் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், 3 ஐசியு பெட், 100 கரோனா தடுப்புக் கவச உடைகள்,5 சக்கர நாற்காலிகள் மற்றும் 3 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கியுள்ளனர் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டபேரவை உறுப்பினர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago