தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மாநில இணைச் செயலாளர் ஜேம்ஸ் கென்னடி வெளியிட்ட அறிக்கையில், "மின்வாரியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யுமாறு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பூர் குமார் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மின்வாரிய பணியாளர்கள் 130 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
பணியாளர்கள் நலன் கருதி, தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்த செயற்பொறியாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், தடுப்பூசி செலுத்தாமல் அதிக அளவில் உள்ள மின்வாரிய பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் காலதாமதமின்றி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago