தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் மருத்துவ துறை சார்ந்த குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர்பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இந்திய அரசின், பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா 3.0 திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக ஒருமாத கால இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன், ஜென்ரல் டியூட்டி அசிஸ்டென்ட், ஜிடிஏ அட்வான்ஸ்டு (கிரிடிக்கல் கேர்), ஹோம் ஹெல்த் எய்ட், மெடிக்கல் எக்யூப்மென்ட் டெக்னாலஜி அசிஸ்டென்ட், லெபோடமிஸ்ட் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.பயிற்சிப் பெற்றவர்கள், பயிற்சிக்குப் பின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
18 வயது நிறைவு
எனவே, முன்களப் பணியாளர்களாக பணியாற்ற ஆர்வமுள்ள 18 வயது நிறைவடைந்த 10-ம்வகுப்பு மற்றும் அதற்குமேல் கல்வித் தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பயிற்சியில் சேர ricentreambattur@gmai.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9444224363 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago