‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடிமாநகராட்சிக்கு உட்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்குடியிருப்பு வளாகத்தில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மண்டபத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைத்தால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுதொடர்பாக, கடந்த 23-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.
இச்செய்தியின் எதிரொலியாக, அம்மா திருமண மண்டபத்தில் கரோனா சிகிச்சை மையம்அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டுள்ளது. இதற்காக, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago