விழுப்புரம் மாவட்டத்தில் 660 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 590 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 47,312 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 848 பேர் உட்பட இதுவரை 39,670 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 17 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 496 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 347 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 20,520 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 129 பேர் உயிரிழந் துள்ளனர். இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 660 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து மாவட்டத்தில் 33,183 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்