தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை : அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிவதற்காக தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று வழங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் நுட்புநர்கள், புள்ளிவிவர பதிவாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார். எஸ்.பி அ.கயல்விழி, திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தினமும் 3,100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி 62,000 பேருக்கும், 18 வயது முதல் 44 வயதுடையோருக்கான தடுப்பூசி 20,000 பேருக்கும் போடப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அடிப்படை நிலையிலான கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்