மன்னார்குடியில் முகாம்கள் அதிகரிப்பு; 6 நாளில் 11,000 பேருக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

மன்னார்குடியில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டதால் 6 நாட்களில் 11,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன் னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி யில், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நீடா மங்கலம் அரசு மருத்துவமனை, மன்னார்குடி மகப்பேறு நிலையம், ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால், கூட்ட நெரிசல், போதிய விழிப்புணர்வின்மை போன்றவற்றால் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

இதையடுத்து, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஏற்பாட்டின்பேரில், ‘மின்னும் மன்னை' என்ற திட்டத்தின்கீழ் மன்னார்குடி தொகுதி முழுவதும் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் 10 முதல் 12 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், முதல்நாளே வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 24-ம் தேதி தொடங்கி 6 நாட்களில் 11 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா கூறியபோது, “மன்னார்குடி தொகுதியில் அதிகளவில் முகாம்கள் நடத்தப்பட்டதால், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து நடத்தப்படும் இந்த தடுப்பூசி முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்