கரோனா சிகிச்சைக்கான உதவிகளை பெற சமூக வலைதளப் பக்கம் உருவாக்கம் :

By செய்திப்பிரிவு

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கையின் விவரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், சந்தேகங்கள், ஆக்சிஜன் தேவை தொடர்பான தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது தேவைகளை சமூக வலைதள பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்வதற்கு பிரத்யோகமான பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முகநூல் முகவரி: www.facebook.com/KanchiColltr

ட்விட்டர் முகவரி: www.twitter.com/KanchiColltr

இந்தப் பக்கங்கள் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவமனை சேர்க்கை, படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவை தொடர்பான விவரங்களை பெற்று கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்