வகுப்பறையை கரோனா வார்டாக மாற்ற - செவிலியர் மாணவர்கள் எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக கரோனாநோயாளிகள் அதிகம் வருகின்றனர். அவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் தேவைப்படுகின்றன.

தற்போது மருத்துவம் மற்றும்அறுவை சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டிடத்தில் 200 படுக்கைகள் காலியாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல் மனநல பிரிவு, கண் சிகிச்சை பிரிவுகளில் 100 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற இடங்களில் ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், மாணவர்களின் வகுப்பறைகளை சேதப்படுத்தி ஆக்சிஜன் வசதி செய்வதற்கான குழாய்கள் பதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு தலையிட கோரிக்கை

மாணவர்களின் வகுப்பறையை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தாமல், மருத்துவமனையில் காலியாகஉள்ள வார்டுகளை பயன்படுத்தவேண்டும் என்றும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூகஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதில் தமிழக அரசுநேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்