திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் இயங்கி வந்தது. இதனை, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆவின் பாலகத்திலும் அதிக அளவில் கூட்டம் கூடியது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் எடுத்த முடிவின்படி, ஆவின் பாலகம் மூடப்பட்டது.
இதுதொடர்பாக நோயாளிகள் கூறும்போது, "பால், தேநீர் மற்றும் வெந்நீர் பெற்று வந்தோம்.ஆவின் பாலகம் மூடப்பட்டுள்ளதால், தற்போது இவை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. உள் சிகிச்சை பெறும் நோயாளிகளின் அவசரத்துக்கு இந்த பாலகம் பயன்பட்டு வந்தது. அதிக கூட்டம் கூடுகிறார்கள் என்றால், போதிய சமூக இடைவெளியை பின்பற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். ஆவின் பாலகம் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago