அவிநாசி வட்டம் பெருமாநல்லூர் பகுதியிலுள்ள குளங்களில் மான், மயில், முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள் ஏராளமானவை வசிக்கின்றன. உணவு, தண்ணீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும்போது,நாய்கள் துரத்தியும், வாகனங்களில்அடிபட்டும் உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், பெருமாநல்லூர் அருகே மேற்குபதி ஓலக்காடு நீரோடை பகுதியில் ஏராளமான மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக, கடந்த வாரம் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சென்று ஆய்வு செய்ததில், 2 ஆண் மயில்கள் உட்பட 21 மயில்கள் ஒரே சமயத்தில் உயிரிழந்து கிடந்தன. பிரேதப்பரிசோதனையில், விஷம் வைக்கப்பட்டிருந்ததால் மயில்கள் உயிரிழந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக திருப்பூர் வனச்சரக அலுவலர் எஸ்.செந்தில்குமார் தலைமையில், வனவர்கள் மூர்த்தி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டது. இதில், வயலில் பூச்சி மருந்து கலந்திருந்த நிலக்கடலை விதையை மயில்கள் உட்கொண்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, அவிநாசிவட்டம் மேற்குபதி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (74) என்பவரை கைது செய்து, வன உயிரின குற்ற வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago