அவிநாசி பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் சொக்கநாதன் (35), நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 150 பேருடன்கொண்டாடி, கரோனா தொற்று பரவல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அவிநாசியை சேர்ந்த சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறும்போது, "கரோனா பொதுமுடக்க நேரத்தில் சுமார் 150 பேரை வைத்து, அரசு அலுவலகமான பேரூராட்சி பின்புறம் சமையல் செய்து அனைவருக்கும் பிரியாணி வழங்கி உள்ளார். சுகாதார ஆய்வாளரே இப்படிசெய்யலாமா? இதுதொடர்பாக பேரூராட்சிசெயல் அலுவலருக்கு புகார் அளித்துள்ளோம்" என்றார்.
அவிநாசி சுகாதார ஆய்வாளர் சொக்க நாதன் ‘இந்துதமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "கரோனா காலகட்டத்தில் தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் உணவு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எனது பிறந்தநாளையொட்டி உணவு சமைத்துகொடுத்தேன். இதற்கு முன்புசுகாதார ஆய்வாளர் இருந்தபோது, பேரூராட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் சமைத்து கொடுத்தோம். காலி இடத்தில் தான் 3 பேர் சமைக்கிறார்கள்" என்றார்.
பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) பாலு கூறும்போது, "தனது பிறந்தநாளுக்கு தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் அவர் உணவு சமைத்து வழங்கியுள்ளார்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago