காணை ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது :

செவிலியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் காணை ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.நேற்று முன் தினம் 754 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் மூன்று பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. அங்கு பணியாற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஒரு வாரமாக அந்த சுகாதார நிலையத்துக்கு, சிகிச்சைக்காக வந்து சென்ற நோயாளிகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு யாரும் இந்த சுகாதார நிலையத்துக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செவிலியர்கள் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்