விழுப்புரம் ஆட்சியர் அண்ணா துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கரோனா நோய் தொற்று சிகிச்சை மேற்கொள்ள விழுப்புரம் இ எஸ் மருத்துவமனை, இ எஸ் செவிலியர் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கரோனாதொற்று சிகிச்சைகளுக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டிற்குரூ.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் அல்லாத படுக்கை ஏ3 – ஏ 6 தரவரிசையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 5 ஆயிரமும், ஏ1, ஏ2 தரவரிசையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 7 ஆயிரமும்,ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி நாள் ஒன்றுக்கு) ரூ.15ஆயிரமும், வெண்டி லேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சை (நாள் ஒன்றுக்கு) ரூ.35ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதி (நாள் ஒன்றுக்கு) ரூ.30ஆயிரமும், ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு மட்டும் (நாள் ஒன்றுக்கு)ரூ 25 ஆயிரமும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இக் கட்டணம் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் உள்ள பயனாளிகளுக்கு பொருந்தும்.
கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago