திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் க.பொன்முடி பேசியது:
தமிழக முதல்வர் கரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் பொறுப்பேற்றாலும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்திட ஆவண செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி எல்ராம்பட்டு ஊராட்சி மற்றும் வடமலையனூர் ஊராட்சி பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தருமாறு என்னிடம் கோரியிருந்தனர். அதனை தொடர்ந்து எல்ராம்பட்டு ஊராட்சியில் கறி மார்க்கெட் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு புதிய ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் அமைக்க ரூ. 2,36,00, முஸ்லீம் தெருவில் புதிய குடிநீர் குழாய் பைப் லைன் அமைக்கும் பணிக்கு ரூ.2,25,103, வடமலையனூர் ஊராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பைப் லைன், புதிய மோட்டார் மற்றும் அறை கட்டும் பணிகளுக்காக ரூ.5,90,000-ம் ஊராட்சி ஒன்றியபொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா முன்னிலை வகித்தார். திட்ட இயக்குநர் முருகண்ணன், உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago