முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் - கரோனா நோயாளிகளிடம் கட்டண வசூல் கூடாது : தனியார் மருத்துவமனைகளுக்கு ஆட்சியர் உத்தரவு

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கரோனா வுக்கு சிகிச்சை பெறுபவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு, கரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழுள்ள மருத்துவமனைகள் விவரம்:

சுதர்ஷன் மருத்துவமனை, ஷிபா மருத்துவமனை, அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை, பீஸ் ஹெல்த் சென்டர், பொன்ரா மருத்துவமனை, வீ.ஜே.மருத்துவமனை, கிருஷ்ணா மருத்துவமனை, சி.எஸ்.ஐ. பெல் பின்ஸ் மருத்துவமனை, ஆர்.எஸ்.பி. நர்ஸிங்ஹோம், வீ.கேர் மதுபாலா மருத்துவமனை, ரோஸ் மேரி மிஷன் மருத்துவமனை, ராயல் மருத்துவமனை, முத்து மருத்துவமனை, கோல்டு சைல்டு அண்டு செஸ்ட் மருத்துவமனை,  சக்தி மருத்துவமனை, நியூ க்ரசென்ட் மருத்துவமனை, விஷ்ணு பிரியா மருத்துவமனை, டாக்டர். அஸ்ரப் ஆர்த்தோ மருத்துவமனை, செல்வன் மருத்துவமனை,  விஜயா மருத்துவமனை, ஜெம் ஹெட் அண்டு நெக் மருத்துவமனை, செல்ல சூர்யா மருத்துவமனை, முத்தமிழ் மருத்துவமனை, சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் மிஷன் மருத்துவமனை.

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற விரும்புவோர், மேற்கண்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.

காப்பீடு அட்டை தொலைந்து விட்டால், தங்களது ரேஷன்கார்டு எண்ணை சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் (73730 04967) அல்லது மாவட்ட கட்டுபாட்டு அறையை (0462 250 1012) தொடர்பு கொள்ளலாம்.

ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் மற்றும் பரிசோதனை களுக்கான கட்டணத்தையும் பொதுமக்கள் செலுத்த வேண்டாம். முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் பயனாளியிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. பொதுமக்கள் தனி அறை அல்லது பிற வசதிகள் கொண்ட அறையில் தங்கினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்.

இதுதொடர்பான புகார்களை 1800 425 3993 மற்றும் 104 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://www.cmchistn.com/ என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் முதல் வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், சாந்தி மருத்துவமனை, மீரான் மருத்துவ மனை, தென்காசி மெடிக்கல் சென்டர், சங்கரன்கோவில் என்.எம்.எஸ் மருத்துவமனை, புளியங்குடி ஜெயம் மருத்துவமனை ஆகிய வற்றில், கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் காப்பீடு அட்டையின் நிலை குறித்து, மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் - 73730 05426 அல்லது மாவட்ட கட்டு பாட்டு அறை 04633 290 458 என்ற எண்களில் அறிந்துகொள்ளலாம்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவில்பட்டியில் ஆர்த்தி மருத்துவமனை, பொதுநல மருத்துவமனை,  மருத்துவமனை, கமலா மருத்துவமனை, சுதிக்க்ஷா பிரபு மருத்துவமனை, செந்தூர் மருத்துவமனை, ஜெய மருத்துவமனை, சசி மருத்துவ மனை, லதா மருத்துவமனை,  முரளி மருத்துவமனை, ஜெய் மருத்துவமனை, துளசி மருத்துவ மனை, ஆர்எம்எஸ் மருத்துவமனை, சிவா மருத்துவமனை, வாசன் மருத்துவமனை, காயல்பட்டினம் கேஎம்டி மருத்துவமனை, நாசரேத் புனித லூக்கா மருத்துவ மனை, தூத்துக்குடியில் திரு இருதய மருத்துவமனை, அற்புதம் மருத்துவமனை, சிட்டி மருத்துவ மனை, தனராஜ் மருத்துவமனை, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை, எபனேசர் மருத்துவமனை, ஏஆர்ஆர் மருத்துவமனை, ராயல் மருத்துவமனை, லட்சுமி பாலி கிளினிக், வீரபாண்டியன்பட்டினம் பி.ஜி. மருத்துவமனை ஆகிய 27 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலரை 73730 04970, 1800 425 3993 மற்றும் 104 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கரோனா தொற்றுக்கு 33 தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் ஜெயசேகரன், பென்சாம், பெதஸ்தா, பிவெல், நெய்யூர் சிஎஸ்ஐ. மிஷன் மருத்துவமனைகள், குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வெட்டுர்ணிமடம் ஹோலிகிராஸ் மருத்துவமனை, கணேசபுரம் ஜோசப் சகாயம் மருத்துவமனை, புத்தேரி கேத்ரின் மருத்துவமனை, பெருமாள்புரம் குமாரசுவாமி மருத்துவமனை, தேரேகால்புதூர் மனுவேல் எலும்பு முறிவு மருத்துவமனை, நாகர்கோவில் மத்தியாஸ் மருத்துவ மனை, திலகராம் நர்சிங் ஹோம், வசந்தம் ஹெல்த் சென்டர், வில்லியம் மருத்துவமனை, ஆதித்யா மருத்துவமனை, நாகர் கோவில் மற்றும் ஈத்தாமொழி சிவா மருத்துவமனை, கன்னியாகுமரி சிவந்தி மருத்துவமனை, மார்த்தாண்டம் தாசையா மெடிக்கல் செண்டர், சுவாமியார்மடம் விஜயகுமார் மருத்துவமனை, ரத்னா மருத்துவமனை,கன்னியாகுமரி கால்வின் மருத்துவமனை, சுபம் மருத்துவமனை, ஜேப்பியார் மேரிபாய் மருத்துவமனை, ஜெஜெ மருத்துவமனை, அன்னம்மாள் மருத்துவமனை, கிரேஸ் மருத்துவமனை, புன்னைநகர் எம்.எல்.மருத்துவமனை, கொட்டாரம் நீலா மருத்துவமனை, ஏ.ஜே.மருத்துவமனை, தக்கலை ஆஷா மருத்துவமனை, மார்த்தாண்டம் பிபிகே மருத்துவமனை.

தனி அறை அல்லது பிற வசதிகள் கொண்ட அறையில் தங்கினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்