வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை அஞ்சலகத்தில் பெறலாம் : நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்

By செய்திப்பிரிவு

மத்திய, மாநில அரசின் நலத்திட்ட பயனாளிகள், தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அஞ்சலகத்திலோ, அஞ்சல்காரர் மூலமாகவோ பெறமுடியும் என நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் டி.ஜெயகீதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது:

நீலகிரி அஞ்சல் கோட்டத்தில்உள்ள கிராம அஞ்சல் ஊழியர்களுக்கும், அஞ்சல்காரர்களுக்கும் செல்போன் மற்றும் பயோ-மெட்ரிக்சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலமாக 2 தலைமை தபால் நிலையங்கள், 52 துணை தபால் நிலையங்கள், 100-க்கும் மேற்பட்ட கிளை அஞ்சலகங்களில் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளும்வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இதேபோல வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் பொதுமக்கள் ஒரு நாளில் ரூ.25,000 வரை செலுத்தலாம். இதற்காக ரூ.1000-க்கு, ரூ.10 என சேவை வரி வசூலிக்கப்படும்.

இந்த சேவையைப் பயன்படுத்தி, தங்களது பகுதியை சேர்ந்தஅஞ்சல்காரரிடம் ஆதார் எண் மற்றும் விரல் ரேகையை பதிவு செய்து, அவரவர் வங்கிக்கணக்கில்இருந்து ரூ.1 லட்சம் வரை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தங்களது வங்கிக்கணக்கில், ஆதார் எண்ணை இணைத்திருந்தாலே போதுமானது.

100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பிரதமரின் கிசான் சம்மன் நிதி உதவித்தொகை மற்றும் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய பயனாளிகளும், இந்த சேவையில் பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்