கரோனா தடுப்பூசி அளிப்பதில்தனியார் தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக்கூறி திருப்பூர் மாவட்டம் சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.இது தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட வேட்டவலம் ஊராட்சித்தலைவர் ஆர்.கணேசன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
கடந்த 20 நாட்களாக தடுப்பூசி கேட்கிறோம். ஆனால்தடுப்பூசி வரவில்லை என்கின்றனர்.இப்பகுதியில் உள்ள தனியார் ஆலைகளுக்கு முன்னுரிமை அளித்து, அங்கு பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கோவை, திருப்பூர் பகுதியில்இருந்து பலர் வந்து தடுப்பூசிபோட்டுச் செல்கின்றனர். ஆனால்சேவூரில்வசிப்பவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்கின்றனர்,’’ என்றார். இதையடுத்து தகவலறிந்து வந்த சேவூர் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர் மோகன்ராஜ் கூறியதாவது: தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று, தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட உத்தரவு உள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்களுக்கு, ஒருபகுதியினர் சென்று தடுப்பூசி செலுத்துகிறோம். இனி, நாள்தோறும் தடுப்பூசி செலுத்தும் நேரம், வயது, எண்ணிக்கை குறித்தவிவரங்கள் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படும், என்றார். அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் கூறும்போது, ‘‘தடுப்பூசிகள் வரும்போது தனியார் ஆலைகள் மற்றும் மக்களுக்கு என பிரித்துக் கொள்கிறோம். அதன்படி தடுப்பூசி போட்டு வருகிறோம்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago