சட்டப்பேரவைத் தேர்தல் - வேட்பாளர் செலவினம் தாக்கல் செய்ய ஜூன் 2 கடைசி நாள் :

சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் செலவின இறுதி அறிக்கையை ஜூன் 2-க்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப். 6-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சமாக ரூ. 33 லட்சம் வரை செலவழிக்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பாளர்கள் அவ்வப்போது செலவினத்தை தாக்கல் செய்து வந்தனர். இந்நிலையில் தேர்தல் செலவின இறுதி அறிக்கையை ஜூன் 2-க்குள் தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேட்பாளர்கள் தங்களது இறுதி தேர்தல் செலவின அறிக்கையை தாக்கல் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் சுயேட்சை உள்ளிட்ட 70 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 56 வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினத்தின் இறுதி அறிக்கையை தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர். தாக்கல் செய்தோரின் இறுதி அறிக்கையை தேர்தல் பிரிவு அலுவலர்கள் நேற்று முதல், சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE