நாகை, மயிலாடுதுறை, கரூர் மாவட்டங்களில் - காப்பீடு திட்டத்தில் கரோனா சிகிச்சை 20 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் :

By செய்திப்பிரிவு

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் கரோனா சிகிச்சை பெறுவதற்கு, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 தனியார் மருத்துவமனைகளுக்கும், கரூர் மாவட்டத்தில் 20 தனியார் மருத்துவமனைகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரவீன் பி.நாயர் (நாகை), லலிதா (மயிலாடுதுறை), பிரசாந்த் மு.வடநேரே (கரூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாகை மாவட்டத்தில் நாகை மருத்துவமனை, கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் கோஹஜ் மருத்துவமனை, நாகை பென்டகன் மருத்துவமனை, மயிலாடுதுறை மாவட்டத்தில் அருண்பிரியா நர்சிங் ஹோம், கொள்ளிடம் விஷ்ணு மருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, கரூர் மாவட்டத்தில் அமராவதி, அப்போலோ லோகா, ஜி.சி, ரத்னா, நாச்சிமுத்து, அபிஷேக் ஆர்த்தோ, ராஜ் ஆர்த்தோ, ஏபிஎஸ், கரூர் கபிலா, கரூர் நர்சிங்ஹோம், கிருஷ்ணா மெடிக்கல் சென்டர், கே.ஜி, ஏபிஜே, செந்தில் எமர்ஜென்சி கேர், தீபா கண்ணன், நாதன், அமிர்தா, அனன்யா ஆர்த்தோ கேர், சக்தி, சுனேத்ரா ஆகிய 20 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்