குமரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு :

கரோனா தடுப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் மா.அரவிந்த் பங்கேற்றனர்.

அமைச்சர் கூறும்போது, “ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதுபெரிய அளவில் இருந்தது. தற்போது அதனை கடந்து வந்துள்ளோம். கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொற்று குறைந்துள்ளது. இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,612 சாதாரணபடுக்கைகள் உள்ளன. அதில்1,855 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவில் 256 படுக்கைகளில் 200 படுக்கைகள் நிரம்பியுள்ளன. கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டால் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இதனை தடுக்க மாவட்டஆட்சியர் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் 100 படுக்கைகள் வீதம் அதிகரிக்க வேண்டும்” என்றார்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். குருக்கள்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம், வடக்குபுதூர், வாசுதேவநல்லூர் தனியார் கல்லூரி, சொக்கம்பட்டி ஆகிய இடங்களில் கரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். நேற்று மாலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE