வேலூரில் நோயாளிகளிடம் - கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள்? : கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வேலூரில் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுசம்பந்த மாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்கு வரத்து அலுவலர் செந்தில்வேலன் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இம்மாதம் இறுதி வரை தளர்வு களற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மருத்துவம் சார்ந்த பணிகளும் பால், குடிநீர், உணவு உள்ளிட்டவை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், பல்வேறு நோய்களால் அவதிப்படும் நோயாளி களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களுக்கும் அரசு அனுமதி வழங்கி யுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்கள் நோயாளிகளை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்ல அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பெரும் பாலான மக்கள் கரோனா அறிகுறி காரணங்களுக்காகவும் கரோனா பாதிப்புகளுக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் அவசர தேவைக்காகவும், நோயாளிகளை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்ற எண்ணத் தால் அருகாமையில் உள்ள ஆட்டோக்களை சவாரிக்கு அழைக்கின்றனர்.

முழு ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் இதை பயன்படுத்திக் கொண்டு மனித நேயமின்றி, வேலூர் மாநகரில் 3 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ. 600 வரை கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். காட்பாடியில் இருந்து வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆயிரக்கணக்கில் பேரம் பேசப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘வேலூர் மாவட் டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவையும் நிறுத்தப் பட்டுள்ளது. ரயில் சேவை மட்டும் இயக்கப்படுகின்றன. இந்நிலை யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து ஒரு தம்பதி காட்பாடிக்கு ரயிலில் வந்தனர்.

காட்பாடியில் இருந்து கணியம் பாடிக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள், காட்பாடி ரயில் நிலை யத்தில் இருந்து கணியம்பாடி செல்ல ஆட்டோ அழைத்தனர். முழு ஊரடங்கு என்பதால் ஒரு சில ஆட்டோக்கள் மட்டுமே அவ் வழியாக சென்றது. அதில், ஒரு ஆட்டோவை மடக்கி கணியம் பாடிக்கு செல்ல வேண்டும் எவ்வளவு எனக்கேட்டபோது, அவர் 3 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சிய டைந்த அந்த தம்பதி தாங்கள் கொண்டு வந்த பைகள் மற்றும் குழந்தைகளுடன் நடந்தே கணியம் பாடி சென்றதாக கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வேலூர் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும் போது, ‘முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோக்கள் இயங்க வேலூர் மாவட்டத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கருதி நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனைக்கு சில பகுதிகளில் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நோயாளிகளிடம் அதிக கட்டண வசூலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீதும், ஆதாரப்பூர்வமாக பொது மக்கள் புகார் அளித்தால் சம்மந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும்.

மேலும், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் மூலம் ஆட்டோ கட்டண வசூல் குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டு உண்மை என்பது தெரிய வந்தால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்