திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை துரிதப்படுத்துவதற் கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் அலையை காட்டிலும், 2-ம் அலை வீரியம் மிக்கதாக உள்ளது.
கடந்த முறை கிராமப்பகுதி களில் கரோனா பரவல் குறைவாக காணப்பட்டது. தற்போது, நகர் பகுதிகளை காட்டிலும் கிராமப்பகுதியில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளன. அதேநேரத்தில் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடலில் ஆக்சிஜன் உதவி கட்டாயமாக தேவைப்படும் என்ற நிலை ஏற்படும் போது தான் மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இதற்கு காரணம் அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லா தது தான். எனவே, கரோனா தொற்று குறித்து ஒவ்வொரு குடும்பத்தின ருக்கும் விரிவாக தெரிந்திருக்க வேண்டும். கரோனா தொற்று ஏற்பட்டால் அச்சப்படாமல் எவ்வாறு முதல் நிலையிலேயே சரி செய்து கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கிராமப்பகுதி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் கரோனா குறித்த சந்தேகங்களை போக்க மாவட்டம் முழுவதும் 1.5 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு கிராமம் மற்றும் தெருவை கண்காணித்து கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முதல் நிலை நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்து வீட்டு தனிமையில் 3 நாட்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவர்களை, தினசரி கண் காணிக்க வேண்டும். ஆங்கில மருத்துவத்துடன், சித்த மருத்துவம் குறித்தும் அவர்களுக்கு ஆலோ சனை வழங்க வேண்டும். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கிராம மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
கிராம மக்களிடம் தனி மனித இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி பயன்பாடு உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளை அப்பகுதி முழுவதும் ஏற்படுத்தி விழிப்புணர்வு வழங்கி கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்பு சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் பழனி, கலைச்செல்வன், வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங் கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago