ஊரகப் பகுதிகளில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 359 ஊராட்சிகளில் 1,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் 3.5 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சிப் பகுதிகளில் 842 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், பல கிராமங்களுக்கு காய்கறிகள் கிடைக்காத நிலை உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, ஊரகப் பகுதிகளில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் தேவையான அளவுக்கு காய்கறிகளை விற்பனை செய்து, தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறும்போது, "மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் 842 வாகனங்கள் மூலம் காய்கறி,பழங்கள் விற்க எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தேவைக்கேற்ப சுழற்சிமுறையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில், தரமான பொருட்கள் விற்கப்படுகின்றன. கிராமங்களுக்கு காய்கறி வாகனம் வரவில்லை என்றால், அருகில் உள்ள ஊராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்