கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான தடுப்பூசி போடும் முகாமை ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் க.கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மா.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட சுகாதாரத்துறை கணக் கெடுப்பின்படி மாவட்டத்தில் 15,30,514 நபர்கள் உள்ளனர். இதில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 6,59,632 நபர்களும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் 1,59,469 நபர்களும் உள்ளனர்.
23.05.2021 அன்று நிலவரப்படி 50,483 நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 20,633 நபர்களுக்கு 2-ம் டோஸ் தடுப்பூசி என மொத்தமாக 71,116 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ள நபர்களுக்கு முதல் தவணையாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 19,300 கரோனா தடுப்பூசிகள் 18 கரோனா தடுப்பூசி முகாம்களில் போடப்பட்டு வருகிறது.
செய்தித்தாள் விநியோ கிக்கும் நபர்கள், பால் விநியோகிப்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள், மருந்து கடைகளில் பணிபுரிபவர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மின்வாரிய ஊழியர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஊழியர்கள், மின்னணு மூலம் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள், அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்கள், அனைத்து போக்குவரத்து ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago