கரோனா தீவிரமாகப் பரவும் நேரத்தில் - தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி துறையினர் எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவரும் நேரத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தொடர்ந்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கு, ஊரக வளர்ச்சித் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தினமும் கரோனா பாதிப்பு 200 ஆக உள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், சாக்கோட்டை, கல்லல் ஒன்றியங்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்கெனவே மே 15-ல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதுபோன்று தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ‘கரோனா தடுப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இந்நிலையில், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் தேவையின்றி கூட்டத்தை நடத்து கின்றனர். தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தினால் கரோனா தொற்று கூடுதலாகப் பரவும் அபாயம் உள்ளது.' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்