மன்னார்குடியில் உள்ள - அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யில் உள்ள அரசு தலைமை மருத் துவமனையில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கரோனா தொற்று சிகிச்சை பணிகள் மேற்கொள்வதை பார்வையிட்டு, மருத்துவர்கள், தொற்றாளர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். ஆட்சியர் வே.சாந்தா, எஸ்.பி அ.கயல்விழி, திருவாரூர் எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், மக்களின் இருப்பிடத்துக்கே சென்று கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றுள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அப்பகுதியிலுள்ள மக்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், மன்னார்குடி மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்கு கூடுதலாக படுக்கைகள் தேவைப்படும் பட்சத் தில், அத்தகைய படுக்கைகளுடன் கூடிய பிரிவுகள் அமைப்பதற்கு தேவையான கட்டிட வசதிகளை தேர்வு செய்து வைத்துக்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயங்கி வரும் 80 படுக்கை வசதிகளை கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை, சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கு அடிப்படை வசதிகள், தரமான உணவு, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவை கூடுதலாக தேவைப்பட்டால், அதுகுறித்து உடனடியாக தனக்கு தெரிவிக் கும்படி மருத்துவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது, மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம், ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, கோட்டாட்சியர் நாராயணன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்