கண்காணிப்பு பணியில் ட்ரோன் கேமரா :

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஊரடங்கை முழுமையாக நிறைவேற்ற ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேற்று தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க, மாவட்ட எல்லைகள் மற்றும் உள் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதான சாலைகளில் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளபோதும், குறுகலான பிற சாலைகளை முழுமையாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கடந்தாண்டை போலவே, குறுகலாக உள்ள அனைத்து சாலைகள் உட்பட இதர பகுதிகளையும் ட்ரோன் கேமரா மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு ட்ரோன் கேமரா கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இதேபோல், மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருந்தால், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு ஊரடங்கை முழுமையாக நிறைவேற்ற முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE