மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் தாவணெபகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘நீலகிரி மாவட்டத்துக்கு 7,600 கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. இன்று(நேற்று) நடைபெறும் முகாமில் 158 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். மருந்துக் கடையில் பணியாற்றுபவர்கள், காய்கறிகள் விநியோகம் செய்பவர்கள், மின்ஊழியர்கள், கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 ஊராட்சிகளுக்கு 500 முகக்கவசம், கையுறை, பாதுகாப்புக் கவசங்கள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்