குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீர் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் நேற்று குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகியது.

இதுதொடர்பாக அப்பகுதியைசேர்ந்தவர்கள் கூறும்போது, "திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் 4-ம் குடிநீர் திட்ட பணிகள்ஒப்பந்ததாரர் மூலமாக நடைபெற்றது. குழி தோண்டும் போது திடீரென குழாய் உடைந்து பல அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டது. அதேசமயம், வெளியேறிய குடிநீர் சாலையில் வெள்ளம்போல ஓடியது. இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மூன்று மணி நேரப் போராட்டத்துக்குபின் தண்ணீர் நிறுத்தப்பட்டு, சீரமைப்புப்பணிகள் தொடங்கின. ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருப்ப தால், வழக்கமான தண்ணீர் பயன் பாட்டைவிட தற்போது அதிகமான தேவை இருக்கும். குடிநீர் வீணானது கவலை அளிக்கிறது" என்றனர். மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, "குடிநீர் குழாய்உடைந்ததால், உடனடியாக தண்ணீரை நிறுத்த முடியவில்லை. மதியம் ஆரம்பித்த சீரமைப்புப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.இன்று (மே 25) காலைக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, பழுதடைந்த குழாய் சீரமைக்கப் பட்டுவிடும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்